2ஜி வழக்கு: சிபிஐயின் மேல்முறையீட்டை ஏற்றது உயர்நீதிமன்றம்
2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையை ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments