இந்த 3 தொகுதிகளில் பாஜக சரித்திர வெற்றி பெறும் - அண்ணாமலை பேட்டி
”எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, ஈரோடு” தொகுதிகளில் பாஜக சரித்திர வெற்றி பெறும்” என அசாத்திய நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
இன்று சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக வாய் மூடி இருப்பது ஏன்? இந்த விவகாரத்தில் டிஜிபியை பலிகிடாவாக்க பார்க்கிறார்கள். முதல்வர் உடன் ஜாபர் சாதிக் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறித்து அவர் முதலில் விளக்கம் கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.பாரதி இது குறித்து எல்லாம் பேச மாட்டார். சிறு, குறு தொழில்துறையின் தலைநகரம் கோவை. அவர்கள் கோரிக்கைக்கு உடன் இருப்போம். பாஜவுடன் அவர்கள் நிற்கலாம். டெல்லியில் அவர்களுக்காக நாங்கள் பேசுவோம். தனியாக தேர்தலில் நிற்பதாக செல்வதை விட அவர்களுக்காக பேசும் எங்களுடன் இருக்கலாம்” என்றார்.மேலும், “22,217 தேர்தல் பத்திரங்கள் 2019-ல் இருந்து விற்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் டபுள் என்ட்ரிகளாக உள்ளன.
எனவே தான் எஸ்.பி.ஐ. அவகாசம் கேட்டு உள்ளது. இதனை ஆளும் கட்சியுடன் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல. திமுக எம்பி 2ஜி ஊழல் செய்யவே இல்லை என்கிறார். 2ஜி டேப்பில் பேசவில்லை என அவர் கூறட்டும். அரசியலை விட்டே செல்கிறேன்” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கோவையில் பாஜக வெல்லும். நிச்சயம் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் பாஜக தான் வெல்லும். இந்தியா கூட்டணியில் நிற்கும் வேட்பாளர்களிடம் கேளுங்கள். எம்பி ஆகிவிட்டு மக்கள் பிரச்சினைக்காக யாரிடம் மனு கொடுப்பார்கள்? நாடாளுமன்றத்திற்கு வெளியே டீக்கடையில் அமர்ந்து மனுவை பார்த்துக்கொண்டு இருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
No comments