திருவாவடுதுறையில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது ..... திரளாக மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.....
குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஐனுல் உலூம் மக்தப் மதரஸா &அல்மதரஸதுல் ஹைருன்நிசா பெண்கள் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய இரண்டாமாண்டு மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி அல்மதரஸதுல் ஹைருன்நிசா பெண்கள் அரபிக்கல்லூரியில் நடைபெற்றது,இந்த கண்காட்சியில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினா பலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மாதிரி வடிவமைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது மேலும் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிற 114 சூராக்களின் வரலாறுகளை நினைவு படுத்தும் விதமாக மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தது பார்த்தவர்களை வரலாறுகளின் பக்கம் கவனத்தை திருப்பும் விதமாக இருந்தது.இந்த கண்காட்சிக்கு சுற்று வட்டார ஊர்களில் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும்,தி.பண்டாரவாடை, கதிராமங்கலம்,திருமங்கலம், நரசிங்கன் பேட்டை,மக்தப் மதரஸா மாணவ மாணவியர் என ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் வந்து கண்காட்சியை கண்டு களித்தனர்.
பின்னர் பார்வையாளர்கள்,மாணவ மாணவியரின் திறமைகளை கண்டு வியந்து பாராட்டியதோடு எல்லா ஊர்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் மாணவர்களுடைய கவனங்களை சிந்தனைகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதறாமல் பாதுகாப்பதற்கும் இது போன்ற நிகழ்வுகள் பாதுகாப்பையும் தரும் என்று வந்திருந்த பலர்கள் கூறியது சிந்திக்க வைத்தது இந்த கண்காட்சிக்கு நடுவராக கிளியனூர் ஜாமியா ரவ்ழத்துஸ் ஸாலிஹாத் மகளிர் அரபி கல்லூரி முதல்வரும் எலந்தங்குடி தலைமை இமாம் மான ஃபஹ்ருத்தீன் ஃபைஜி தி.பண்டாரவாடை இமாம் அப்துல் ரஹ்மான்.மிஸ்பாஹி கிளியனூர் பேராசிரியர் ஜூபைர் அலி மஹ்தி கிளியனூர் பேராசிரியர் தைய்யான் முஹம்மது மஹ்தி ஆகியோர் வருகை தந்து சிறப்பான முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது திருவாவடுதுறை முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் முத்துவல்லி நாட்டாமை பஞ்சாயத்தார்கள் ஹைருன் நிஷா பெண்கள் அரபிக் கல்லூரி தலைவர் செயலாளர் நிர்வாக பெருமக்கள் ஐனுல் உலும் மதரஸாவின் நிர்வாகிகள் சிறப்பான முறையில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சி இறுதியில் ஐனுல் உலூம் மக்தப் மதரஸா ஆசிரியர் ஷேக் முஹம்மது ரஹீமீ நன்றி தெரிவித்தார்.
No comments