தகாத உறவு: தொழிலாளி நடுரோட்டில் குத்திக்கொலை.....
மதுரை செல்லூரைச்சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர், கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்த போது, அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த ஜெய்கணேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சாமிநாதன் மனைவிக்கும், ஜெய்கணேஷ்க்கும் நீண்ட நாளாக தொடர்பு இருந்துள்ளது. இதனைக் கண்டித்தும் அவர் இதை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன், வேலைக்குச் சென்ற ஜெய்கணேசை வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் சாமிநாதன் மீது வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீஸார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர். தகாத உறவால் நடுரோட்டில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments