• Breaking News

    நாகை: உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி


    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிற துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த ஒரு நாள் பயிற்சி  நடைபெற்றது இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் பயிற்சியை தொடங்கி வைத்தார்.உதவி திட்ட அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார்.

      தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் ஸ்ரீரங்கபாணி பயிற்சியில் உணவு, ஊட்டச்சத்து,ஆரோக்கியம் ,மற்றும் சுகாதாரம் வாழ்வாதாரத்திற்கான இணைப்பு , ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சி மற்றும் 1000 நாட்கள் பராமரிப்பு முறை, தாய் வழி ஊட்டச்சத்து,தாய்ப்பால் மற்றும் இணை உணவு,பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு,ரத்த சோகை,ஊட்டச்சத்து தோட்டம் பற்றிய ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

    இந்த பயிற்சி ஊட்டச்சத்து குறைபாடு  இல்லாத மாவட்டமாக உறுதி  மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்பயிற்சியில் பிற துறை அலுவலர்கள் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் , காவல் ஆய்வாளர்,வட்டார மருத்துவ அலுவலர்,சமூக பாதுகாப்புத் துறை,குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்,வட்டார அளவிலான கூட்டமைப்பு,ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தொண்டு நிறுவனங்கள்,சட்ட ஆலோசகர் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் இந்துஜா,சினேகா, வைஜெயந்தி,உடன் இருந்தனர்.

    மக்கள் நேரம் (இணையதளம்) செய்திக்காக நாகை மாவட்டத்தில் இருந்து சக்கரவர்த்தி.

    விளம்பர தொடர்புக்கு 9788341834

    No comments