தமன்னா நடிப்பில் கடந்த வருடம் தமிழில் ஜெயிலர், தெலுங்கில் போலோ சங்கர், மலையாளத்தில் பந்த்ரா ஆகிய படங்கள் வந்தன. தமிழில் அரண்மனை 4-ம் பாகம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.தற்போது 2 இந்தி படங்கள் மற்றும் தெலுங்கில் ஒடேலா 2-ம் பாகம் ஆகிய படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.
இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.இருவரும் ஜோடியாக விழாக்களில் பங்கேற்பதும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதுமாக இருக்கிறார்கள். விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமன்னா கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தி வருகிறார். தற்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கழுத்தில் மாலையுடன் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.சிவன் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின்றன.
No comments:
Post a Comment