தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணுவதில் மிகுந்த இழுபறி நீடித்து வந்தது. காரணம், காங்கிரஸ் கேட்கும் சில தொகுதிகளை திமுக தர மறுத்து வந்தது. உதாரணத்திற்கு, கரூர் மற்றும் திருச்சி தொகுதிகளை அங்குள்ள எதிர்ப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க திமுக தயாராக இல்லை.
அதேபோல கடலூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு வந்த நிலையில் அது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் போட்டியிட வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியையும் மறுத்து வந்தது திமுக. இதனால் காங்கிரஸிற்கான 9 தொகுதிகள் எவை என்பது சிக்கலாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில். இழுபறி பட்டியலில் இருந்த திருச்சியை தவிர்த்து விட்டு கரூரை மீண்டும் காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் அங்கு கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜோதிமணி மீண்டும் வேட்பாளர் ஆவது உறுதியாகி உள்ளது.அதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கருசர் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட போது அவருக்கு திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தன்னையும் அதுபோல கடலூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற தலைமையிடம் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவனுக்காக திமுக அந்த தொகுதியை கொடுக்க மறுத்து வந்தது.
இருப்பினும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடலூர் தொகுதியை காங்கிரசுக்கு திமுக வழங்கியிருக்கிறது. அதனால் அங்கு கே.எஸ்.அழகிரி போட்டியிடுவது உறுதி ஆகியுள்ளது. இவர் ஏற்கெனவே கடலூரில் நின்று எம்பியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment