தஞ்சை: கூண்டோடு பாஜகவில் இணைய திட்டம் போட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்.....
தஞ்சாவூர் மாவட்ட தேமுதிக கூண்டோடு கலைக்கப்பட்டு பாஜகவில் இணைய உள்ளது. தஞ்சாவூர் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கருப்பு முருகானந்தம் முன்னெடுப்பில் தஞ்சாவூர் தேமுதிக நிர்வாகிகள், பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் நாளை இணைய உள்ளனர்.
இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதன், தேமுதிகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருடன் கட்சி நிர்வாகிகள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செங்குட்டுவன் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டது, தஞ்சாவூர் தேமுதிக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments