இணையத்தில் வைரலாகும் நடிகை டாப்சியின் திருமண வீடியோ - MAKKAL NERAM

Breaking

Wednesday, April 3, 2024

இணையத்தில் வைரலாகும் நடிகை டாப்சியின் திருமண வீடியோ

 

தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்சி. இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஷாருக் கான் நடித்து இந்தியில் வெளியான டங்கி படத்தில் டாப்சி நடித்திருந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் பிரிமியர் லீக் ஆட்டத்தின்போது பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு காதலிக்க தொடங்கினர்.இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி டாப்சி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.

இவர்களின் திருமணத்தில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, இவர்களின் திருமணம் புகைப்படங்கள் ஒன்றுகூட வெளியாகவில்லை.திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் இந்த செய்தி உண்மைதானா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அதனைபோக்கும் வகையில், டாப்சியின் திருமண வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் நதிக்கரையில் திருமணத்தை முடித்திருக்கிறார் டாப்சி. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment