தொழில்நுட்பக் கோளாறு...... டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ - MAKKAL NERAM

Breaking

Saturday, April 27, 2024

தொழில்நுட்பக் கோளாறு...... டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ

 

டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்வதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-129 விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 170 பேர் இருந்தனர்.

இந்நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் இன்று மதியம் 2.40 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment