• Breaking News

    மீஞ்சூர் வடக்கஞ்சி என அழைக்கக்கூடிய 1300 வருடங்கள் பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கொடியேற்றம் மிக விமர்சையாக நடைபெற்றது

     

    1300 வருடங்கள் பழமையான வடக்காஞ்சி என அழைக்கக்கூடிய மீஞ்சூர் ஸ்ரீ  வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள பட்டாச்சாரியார்கள் இன்று காலை 4 மணி முதல் தொடங்கி ஆறு மணிவரை வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கருடன் உருவம் பதித்த கொடி  நடைபெற்றது.

     இதனைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு கருட வாகனம் சிம்ம வாகனம் சூரிய பிரபை சந்திர பிரபை பல்லாக்கு போன்ற 10 வாகனங்களில் எம்பெருமான்  மாடவீதிகளில் காட்சியளிப்பார் முக்கிய நாளான ஏழாம் நாள் அன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். சுற்றுவட்டார பகுதியில் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பி சாமி தரிசனம் செய்வார்கள்.

    பொன்னேரி செய்தியாளர் - எம்.சுந்தர்

    No comments