• Breaking News

    தஞ்சாவூர்: குளியலறையில் மனைவிக்கு பதிலாக மாமனாரை கொலை செய்த கணவன்.....


    தஞ்சாவூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜ மனோகரன்.  இவர் தன்னுடைய மகள் மனோ ரம்யாவை கடந்த 2016 ஆம் வருடம் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனோ ரம்யா தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் ராஜ்குமார் கடந்த 16ஆம் தேதி ரம்யா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு குளியல் அறைக்கு வரும் ரம்யாவை கொலை செய்ய திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய மாமனார் வந்ததால் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார். இதனை அடுத்து ராஜ்குமாரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments