50 பெண்களை ஏமாற்றிய யூடியூப் மந்திரவாதி - MAKKAL NERAM

Breaking

Saturday, May 11, 2024

50 பெண்களை ஏமாற்றிய யூடியூப் மந்திரவாதி

 

சிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மாந்திரீகார் அர்ஜுன் கிருஷ்ணாவை சென்று பார்த்துள்ளார்.

அவர் அந்த பெண்ணை குடும்பத்துடன் சேர்த்து வைப்பதாக கூறி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெற்றது மட்டுமல்லாமல் பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இதே போல் 50 பெண்களை அவர் ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை கோடி சார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment