நிலக்கோட்டை அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த சித்தர்கள் நத்தம் ஸ்ரீ கருமலை அய்யன் சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேவுள்ள சித்தர்கள் நத்தம் கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த கருமலை அய்யன், பிதிரை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் குரு நான்கு மக்கள் குருவி சின்னன் கூட்டத்து பங்காளிகள் சார்பில் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் துவங்கிய யாகசாலை பூஜையில் லஷ்மி நவக்கிரஹ பூஜை,கோபூஜை,பூர்ணாகுதி மற்றும் பிரம்மாண்ட தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, தொடர்ந்து திரைப்படப் பாடகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேரன் ராஜேஷ் மகாலிங்கம் மற்றும் அவர் மனைவி வித்யா ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில், நிலக்கோட்டை சர்வ சாதகம் சௌந்தர்ராஜன் என்ற ராஜா பட்டர் ஸ்வாமிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர், அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் ஓம் சக்தி ஆதிபராசக்தி என்ற விண்ணை முட்டும் கோசுத்துடன் அம்மனை வழிபட்டது அனைவரையும் பக்தி பிரசவத்தின் ஆழ்த்தியது.
தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது,மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இக்கும்பாபிஷேக விழாவிற்கு சென்னை,மதுரை,கோவை,நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பத்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கினர்.
No comments