சிவகாசி: பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கு.... 4 பேர் அதிரடி கைது - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 19, 2024

சிவகாசி: பன்றி இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கு.... 4 பேர் அதிரடி கைது

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பிரசாந்த். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பிரசாந்த் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்கள். இந்த வழக்கில் பிரசாந்தின் மனைவி மகாலட்சுமி உறவினர்களான  சதீஷ்குமார், முத்துக்குமார், கண்ணனின் நண்பர் ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  போலீசார் இது குறித்து விசாரணையில் மகாலட்சுமியுடன் பிரசாந்த் சேர்ந்து வாழாததால் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

No comments:

Post a Comment