சிம்லாவில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து..... 4 பேர் பலி.... - MAKKAL NERAM

Breaking

Friday, June 21, 2024

சிம்லாவில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து..... 4 பேர் பலி....

 

இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் இமாச்சல் சாலைப் போக்குவரத்து கழகத்தின் (எச்ஆர்டிசி) பேருந்து இன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 7 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த பேருந்து ஜுப்பால் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து மலைப்பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், பேருந்தின் அடியில் சிக்கி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து நடந்த இடத்திற்கு சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) ராஜீவ் சங்கையன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், ஒரு பெண் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தனர் என்று அவர் கூறினார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment