மின் கட்டணம் உயர்வு என்பது வதந்தி..... தமிழக அரசு விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 11, 2024

மின் கட்டணம் உயர்வு என்பது வதந்தி..... தமிழக அரசு விளக்கம்

 

தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பழைய குறைந்தபட்ச கட்டணம் கட்டணம் 170 ரூபாயாக இருந்த நிலையில் புதிய கட்டணமாக 55 ரூபாய் உயர்த்தப்பட்டு 225 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கட்டண உயர்வு தொடர்பான பதிவுகளை மறுபதிவு செய்து தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இதனால் பயனாளர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்த தகவல்களை தற்போது தமிழ்நாடு அரசு, மின்வாரியம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

அதன்படி, ’ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. 2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்.’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment