நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி இரண்டாவது திருமணத்திற்கு விருப்பம் - MAKKAL NERAM

Breaking

Monday, June 10, 2024

நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி இரண்டாவது திருமணத்திற்கு விருப்பம்

 

தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரேணு தேசாய் தமிழில் பார்த்திபன், பிரபுதேவாவுடன் 'ஜேம்ஸ் பாண்டு' படத்தில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தார். அதனைதொடர்ந்து, நடிகர் பவன் கல்யாண் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

ஆனால் ரேணு தேசாய் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு இரண்டாவது திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திடீரென்று குழந்தைகளின் எதிர்காலத்துக்காக திருமணத்தை ரத்து செய்து விட்டார். தற்போது குழந்தைகள் வளர்ந்துள்ள நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து ரேணுதேசாய் கூறும்போது, "எனது குழந்தைகள் பெரியவர்களாகி விட்டனர். அவர்கள் என்னிடம் உங்களுக்கு யாரை பிடித்துள்ளதோ அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். அவர்கள் அனுமதி அளித்துள்ளதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment