தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அதிக முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ப. சிதம்பரம் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை டி.ஆர் பாலு முறியடித்தார். அதாவது டி.ஆர் பாலு இதுவரை 6 முறை எம்பியாக இருந்த நிலையில் தற்போது 7-வது முறையாக வெற்றியை உறுதி செய்ய இருக்கிறார்.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர் பாலு வெற்றி பெற்றுள்ளார்.மேலும் இதற்கு முன்னதாக சிவகங்கை தொகுதியில் வெற்றி ப. சிதம்பரம் 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment