மேஷம் ராசிபலன்
உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இன்று கவனம் செலுத்துங்கள். கடந்த சில நாட்களாக நீங்கள்அதைப்புறக்கணித்து வருகிறீர்கள். இதனால் உங்களுக்கு உண்டாகும்பாதிப்புகளைச்சரி செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. இன்று உங்கள் வாழ்க்கையிலும், உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையிலும்நிறையப்பேசி பழகுவீர்கள். நேர்மறையான, மேம்பட்ட விஷயங்களைச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் காண்பீர்கள். காதல் உங்களை மிகவும் எதிர்பாராத வழியில் கண்டுபிடிக்கும். ஒரு நபர் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். மேலும், இது உங்கள் நாளில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கலாம்.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் நிதி நிலை பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதைச் சரி செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அப்படி தேவையற்ற வாங்கி செலவு செய்தால், நீங்கள் மாத இறுதியில் வருத்தப்பட வேண்டியிருக்கும். வாழ்க்கை உங்களைச் சோர்வடையச் செய்து விட்டதாகவும், அதே நேரத்தில் நீங்கள் நிறைய விஷயங்களை எதிர்த்துப் போராடுவதாகவும் உணர்கிறீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகளைப் பெறுவீர்கள். ஓய்வெடுக்கவும் அல்லது வாழ்க்கையின் இன்பங்களைப் பெற்றிடத் தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கு உண்மையில் தேவையில்லாத விஷயங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டாம்.
மிதுனம் ராசிபலன்
இந்த நாள் உங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தொழில் மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் கலையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலை விஷயங்களை வீட்டிற்குக் கொண்டு வருவதால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் போதுமான நேரத்தைச் செலவிட உங்களால் முடியாமல் போகலாம், உங்களது சகாக்களினால் உண்டாகும் அழுத்தம் உங்கள் வாழ்க்கையில் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் நீங்கள் சொல்லும் "இல்லை" என்ற சொல்லை உறுதியாகச் சொல்ல வேண்டும்.
கடகம் ராசிபலன்
பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படலாம். மேலும், வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் தேர்வு செய்தவை மற்றும் முடிவெடுத்தவற்றை வெளிக்காட்டச் சிறிதளவில் நேரத்தைச் செலவிடுங்கள். இதன் மூலம், உங்களுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த கேள்விகளில் சிலவற்றுக்குப் பதில் கிடைக்கச் பெறுவதுடன், உங்களுக்குத் தேவையான தெளிவுகளைத் தரும். உங்கள் மனதைக் கவலையடையச் செய்யும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை பெறவும். உங்களை விரும்புவாரால் மட்டுமே உங்களுக்காகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.
சிம்மம் ராசிபலன்
அச்சச்சோ, அந்த காதல் உணர்வுகள் உங்களைச் சித்திரவதை செய்யும்! உங்களுக்கு உண்டான பிரச்சினைகளிலிருந்து ஒரு நபர் உங்களைக் காப்பாற்றுவார் என்றும் தெரிந்தால், உங்கள் மனம் அதற்கேற்ப வேகமாக இயங்க தொடங்கும். உங்களைப் போலவே உங்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் கொடுங்கள், மேலும், அவருக்கான இரண்டாவது வாய்ப்பை வழங்க வேண்டும். இதை அவசரமாகச் செய்வதற்குப் பதிலாக, பொறுமையாக இருக்க வேண்டும்.
கன்னி ராசிபலன்
சில நேரங்களில் செயல்களை உங்கள் வழியிலேயே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள், இந்த செயல்களைச் செயல்படுத்தும் போது உங்களுக்கென உள்ள தனிப் பண்புகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம். இது கண்டிப்பாகப் பாராட்டைப் பெறும். தினமும் தொடர்ந்து செயல்படுத்தினால், நாளாக நாளாக அந்த செயல்களும் சிறப்பாகச் செயல்படத் தொடங்கும். உங்களைத் தடுத்து நிறுத்தும் பல விஷயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதுபோன்ற அற்ப விஷயங்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முடியாது. புதிதாக ஒன்றை வாங்குவதாக இருந்தாலும், மனதில் தோன்றும் முடிவுகள் தவிர்த்து விட்டு, பணம் எவ்வளவு செலவாகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.
துலாம் ராசிபலன்
இன்றைய நாளை நீங்கள் சற்று குழப்பமான நிலையில் தொடங்கலாம். மேலும், நீங்கள் கொஞ்சம் பொறுமையிழந்து போகலாம். வெற்றி பொறுத்தவரை பொறுமை மிகவும் முக்கியமானது. நீங்கள் இன்று சற்று பொறுமையிழந்து உள்ளீர்கள். ஒரு நிமிடத்தில், ஒரு மைல் தூரத்தைக் நீங்கள் கடக்க விரும்புகிறீர்கள். அவசரப்படுவது ஒருபோதும் ஒரு நல்ல விஷயமல்ல என்பதால், இது ஒரு சிறந்த யோசனை அல்ல. இன்று, நீங்கள் கொஞ்சம் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். இது உங்களது முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவதை தடுக்கக்கூடாது.
விருச்சிகம் ராசிபலன்
உங்களது மனதில் படுவதை மற்றவர்களிடம் பேசுவது எப்போதும் புத்திசாலித்தனமாக இருக்காது. உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் நேர்மையாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனாலும், அவர்களின் இதயத்தை நொறுங்கச் செய்வதற்கு பதிலாக, எளிதானதும், மனதிற்கினியதுமான வார்த்தைகளை பேசுவதை தேர்வு செய்யுங்கள். அவை அவர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும், அது அவர்களின் நாளை நிச்சயமாக மாறும். விமர்சனம் என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும், ஒருவரை அடிக்கடி விமர்சிப்பது என்பது அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அவர்களை காயப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன்
ஒரு வாரத்திற்குள் நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியலில், உபயோகமான ஆக்கத்திறன்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும். நேரம் குறைவாகவே உள்ளது. எனவே, ஒவ்வொரு நொடிக்கும் நீங்கள் கணக்கு சொல்லியே ஆகவேண்டும். அற்பத்தனமான செயல்களில் ஈடுபட்டு உங்களது கணநேரத்தைக் கூட வீணாக்காதீர்கள். இங்கே, சோம்பேறித்தனத்திற்கே இடமில்லை. எனவே, நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கும் போது, ஏதோ ஒன்று அத்தியாவசமாக தேவைப்படுவது போல் உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் மனதை மாற்றி, வித்தியாசமாக ஏதாவது செய்யுங்கள். நீங்கள் இன்று கொஞ்சம் அன்பில்லாத நிலையினை உணர்கிறீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இது மட்டுமே நிரந்தரமான உண்மை நிலை அல்ல. அன்பு என்பது எப்போதுமே ஒரு தொடுதல் சார்ந்த உணர்வினை மட்டும் கொண்டது கிடையாது என்பதை உணருங்கள்.
மகரம் ராசிபலன்
எப்போதுமே, உங்களது முடிவெடுக்கும் திறனை நீங்களே சந்தேகித்துள்ளீர்கள். சந்தேகப்படுவதை நிறுத்திவிட்டு, நீங்களே சொந்தமாக உங்களது முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புங்கள். இன்று, வெறுமனே அமைதியாக இருப்பதும் மற்றும் உங்களது ஆத்ம துணையாளருடன் நேரத்தை செலவிடுவதும் உங்களுக்கு நிறைவான அமைதியைத் தரும். உங்களது அன்பிற்கினியவருடன் நட்புறவை வலுசேர்க்க நீங்கள் ஆடம்பரமான இடங்களுக்கு செல்லத் தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று ஆகும். எனவே, உங்கள் நாளில் இது மந்தமான தருணம் அல்லை என்பதை உங்களது நண்பர்கள் உறுதி செய்வார்கள்.
கும்பம் ராசிபலன்
வருத்தம் என்பது உங்களிடம் இருந்து வெளியேற வேண்டிய ஒன்று. உங்கள் அமைதியைக் குலைக்கும் ஒரு கடினமான உறவோடு நீங்கள் சமாதானமாக இருக்க வேண்டும். உங்கள் அறிவையும், திறமையையும் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் உங்கள் உள்ளுணர்வைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது மன அழுத்தத்தைக் குறைக்க இன்று ஒரு வழியைத் தேட வேண்டும். நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்யுங்கள் - பயணங்களை மேற்கொள்ளுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள் அல்லது சோம்பேறித்தனத்தை விட்டு குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள்.
மீனம் ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
No comments:
Post a Comment