• Breaking News

    நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை...... தி.மு.க முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது


    திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ம் தேதி நடைபெறுவதையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதி பாக முகவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனை காணொளி காட்சி மூலம் கும்முடிபூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் திமுக தலைமையில் இருந்து காணொளி காட்சி மூலம்  மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் முகவர்களுக்கு அமைப்பு செயலாளர்  ஆர் எஸ் பாரதி   கழக செய்தி துறை செயலாளர் டி கே எஸ் இளங்கோவன்  கழக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோவன்  ஆலோசனை வழங்கினர்.

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து வழங்கப்பட்டது.   இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே எஸ் கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் செல்வ சேகரன், காசு ஜெகதீசன், சுகுமாரன், மணிபாலன், ஜான்,பொதுக்குழு உறுப்பினர் பாசே குணசேகரன், நகர செயலாளர்கள், அறிவழகன்,ரவிக்குமார்,முத்து, மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பாக முகவர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

    No comments