பிரபல நடிகர் சார்லி மகன் திருமணம்...... நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 11, 2024

பிரபல நடிகர் சார்லி மகன் திருமணம்...... நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சார்லி. இவர் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.‌ இவருடைய மனைவி அந்தோனியம்மாள். இவர்களுடைய இளைய மகன் எம். அஜய் தங்கசாமிக்கும், பெர்மிசியா டெமி என்பவருக்கும் நேற்று முன்தினம் ஒரு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது.

No comments:

Post a Comment