5 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கிய பேக்கரி உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 11, 2024

5 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கிய பேக்கரி உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்

 

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் பேக்கரி உரிமையாளர் கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் வேல்முருகன் வாங்கிய பாதாம் கீர் குளிர் இல்லாததால் அதனை குளிர் செய்து தரும்படி பேக்கரியில் கேட்டுள்ளார். இந்நிலையில் அதனை குளிரூட்டுவதற்கு வேல்முருகனிடம் பேக்கரி உரிமையாளர் அதிகமாக 5 ரூபாய் வசூலித்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று பேக்கரியில் அடிதடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

No comments:

Post a Comment