செங்கல்பட்டில் நடைப்பெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - MAKKAL NERAM

Breaking

Friday, June 21, 2024

செங்கல்பட்டில் நடைப்பெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


சேலஞ்சர்ஸ் செஸ் அகாடமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல் சங்கம் இணைந்து மாநில அளவிலான சதுரங்கப் போட்டி செங்கல்பட்டு Scad world பள்ளியில் ஜூன் 16அன்று நடைபெற்றது . 

இந்தப் போட்டியில் 8,10,13,20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது Scad இன்ஸ்டிடியூஷனின்  சார்பில் தலைமையாசிரியர் திருமதி. மாலதி ஜெயபிரகாஷ் மற்றும்  திருமதி.ஆனந்திபாபு ஆகியோர் சார்பில் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 15 மாணவ மாணவியர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் மெடல்கள் செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல் சங்கத் தலைவர் திரு.பாண்டியன் , கவுரவத் தலைவர் திரு.இளங்கோவன் , தாலுகா துணைத் தலைவர் திரு.பாண்டியன்,  ஆகியோர் பரிசளித்து கௌரவித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் சேலஞ்சர்ஸ் அகாடமி தலைவர் திருமதி சுகன்யா, செயலாளர் திரு கண்ணன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் ரொட்டேரியன் பாலசுப்பிரமணியம்மற்றும் இணை செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி, அவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment