மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் வசிக்கும் இக்காமா சாதிக் பாஷா என்பவர் மீது கொலை முயற்சி வழிப்பறி கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டது ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளராக கூறப்படும் இகாமா சாதிக் பாஷா வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு INA சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா அரங்கங்குடியில் வசிக்கும் இதயத்துல்லா என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியதாக இகாமா சாதிக் பாஷா மற்றும் அவரது நண்பர் சென்னை மயிலாப்பூர் சேர்ந்த அயூப்கான் ஆகிய இருவரை செம்பனார்கோயில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
அரங்ககுடியில் வசிக்கும் ஹிதயத்துல்லாவின் மகன் ரிஸ்வான் என்பவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த இப்ராஹிம் மகள் ரமீஸ்பர்வீன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது ரிஸ்வான் மற்றும் ரமீஸ்பர்வின் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில் திருமணம் முறிவு ஏற்பட்டு அமெரிக்காவில் முறைப்படி விவாகரத்து பெற்றனர் தொடர்ந்து கடந்த மே மாதம் அரங்கக்குடியில் முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் விவாகரத்து அளிக்கப்பட்டு நீடூரில் முஸ்லிம் முறைப்படி பத்வா வழங்கப்பட்டது. இதற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 42 லட்சம் பணம் மற்றும் திருமணத்தின் போது அளிக்கப்பட்ட 40 பவுன் நகை ஆகியவை ரமீஸ்பர்வீன் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னிலையில் மணமகன் ரிஸ்வான் இன் தந்தையிடம் கடந்த 16ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட இக்காமா சாதிக் பாஷா 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் முட்டி போட வைத்து பணத்தை பெறுவேன் என்று மிரட்டல் கொடுத்துள்ளார் இது தொடர்பாக ஹிதாயத்துல்லா செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அயூப்கானை கைது செய்து தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment