செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல் - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல்

 

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று மதியம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சுவலி ஏற்படுவதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜி ராயப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இசிஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சு விடுவதில் இருந்த சிரமமும் தற்போது சரியாகியுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment