தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியின் நிறுவனர் லியோமுத்துவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மறைந்த கல்லூரியின் நிறுவனரும், முன்னாள் கல்வி குழும தலைவருமான லியோமுத்து அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கல்லூரி வளாக நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறைந்த லியோமுத்து அவர்களின் குடும்பத்தினரும், கல்வி குழும முதன்மை செயல் அதிகாரியுமான சாய்பிரகாஷ் லியோ முத்து மற்றும் கல்லூரி முதல்வர்கள், ஆசிரிய பெருமக்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு லியோமுத்து அவர்களது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை இன்போசிஸ் வியாபார தலைவர் சுஜித் குமார் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கல்வி என்பது வாழ்க்கை தரத்தை எவ்விதம் உயர்த்து என பல்வேறு கருத்துக்களை முன் வைத்து பேசினார்.
லியோமுத்து நினைவேந்தல் நாளில் சென்னைசென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் 100 பேருக்கு 10 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கபட்டது. இதில் அறக்கட்டளை துனைத் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, நிர்வாக இயக்குநர் சத்யமூர்த்தி, அறங்காவலர்கள் சர்மிளாராஜா, ரேவதி சாய்பிரகாஷ், மூர்த்தி, சதீஷ்குமார் கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிகுமார், முனைவர் இராஜா உட்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
No comments