• Breaking News

    அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் கலைமாமணி ஆவடி குமார் நடத்திய கவியரசு கண்ணதாசன் விழா..... சிறப்பு விருந்தினராக மிஸ் தமிழ்நாடு டாக்டர் ஷீபா லூர்தஸ் பங்கேற்பு......


    06.07.2023 அன்று சைதை துரைசாமி அம்மா மண்டபம் வேளச்சேரியில் அனைத்திந்திய தமிழ் சங்க தலைவர் கலைமாமணி சொல்லின் செல்வர் ஆவடி குமார் அவர்களின் தலைமையில் கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கவியரசு கண்ணதாசன் புதல்வர், வழக்கறிஞர் காந்தி கண்ணதாசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மிஸ் தமிழ்நாடு இளம் புயல் டாக்டர்.ஷீபா லூர்தஸ் அவர்களுக்கு மேலாண் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் ' கவியரசு கண்ணதாசன் விருது ' சான்றிதழ் வழங்கி அவர்களை கௌரவித்தார். மேலும் டாக்டர் ஷீபா அவர்கள் தமிழ் மொழியின் மாண்பும்,தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான வியூகங்களையும்,  பிற நாட்டினர் தமிழுக்கு தரும் முக்கியத்துவமும் பற்றிய சொற்பொழிவை ஆற்றினார். 

     மூன்று அமர்வுகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கவிதைகளை அரங்கேற்றம் செய்தனர். இவ்விழாவில் ஓவிய கவிஞர் அமுதோன் கவிஞர் அமுதபாரதி, இலக்கிய பேரொளி நீதிபதி மு.புகழேந்தி, கலைமாமணி முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன், முனைவர் நெய்தல் நாடன், உலகப்  பண்பாட்டுச் சங்க நிறுவுனர் வெண்பா இரா.பாக்கியலட்சமி, அமுதா மெட்ரிக் பள்ளி தாளாளர் முனைவர் முதா பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் வீ.ஜெயப்பிரகாஷ் மற்றும் பல இலக்கியவாதிகள் கலந்து கொண்டது மாநில அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    No comments