அரசு பள்ளி வகுப்பறையில் குடைபிடித்தபடியே பாடம் கவனித்த மாணவர்கள் - MAKKAL NERAM

Breaking

Friday, July 26, 2024

அரசு பள்ளி வகுப்பறையில் குடைபிடித்தபடியே பாடம் கவனித்த மாணவர்கள்

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வகுப்பறைக்குள் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதோடு வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் மழை பெய்யும் சமயத்தில் மாணவர்கள் வகுப்பறைக்குள் குடைப்பிடித்தவாறு அமர்ந்து கொண்டே பாடம் கவனித்தனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நென்னல் மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் ஆகியோர்களை சஸ்பெண்ட் செய்த நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment