தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜ்ஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, பெண் மருத்துவப் பிரிவு ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மருத்துவர்களிடம் தற்போது மருத்துவமனையில் எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், வெளிநோயாளிகள் எத்தனை பேர், உள் நோயாளிகள் எத்தனை பேர் என கேட்டு அறிந்து கொண்டார்.
இவனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மற்றும் மகப்பேறுக்காக புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அவ்வாறு விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு அங்குள்ள பொறியாளர்களிடம் எவ்வாறு கட்டிடம் கட்டப்படும் என்றும், இனி வேறு எந்த ஒரு விபத்தும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புடன் பணி செய்ய கேட்டுக்கொண்டார்.
புதிய கட்டிடம் இடிந்து விழுந்து ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து 30 நாட்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment