சிவகங்கை: டெண்டர் வைக்காத சாலைக்கு பில் கேட்டு பெண் உதவி பொறியாளரை தாக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் - MAKKAL NERAM

Breaking

Friday, July 26, 2024

சிவகங்கை: டெண்டர் வைக்காத சாலைக்கு பில் கேட்டு பெண் உதவி பொறியாளரை தாக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்


பெண் உதவி பொறியாளரை இரும்பு சேரை தூக்கி தாக்க முயன்ற கோவனூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் செயலை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் பெண் உதவி பொறியாளராக இருப்பவர் கிருஷ்ணகுமாரி இவர் ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்து கொண்டிருந்த  கோவனூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகன் என்பவர் சாலை போட்டதற்கான பில்லை கொண்டுவந்து கொடுத்துள்ளார்.அப்போது பெண் பொறியாளர் கிருஷ்ணகுமாரி டெண்டர் வைக்காத சாலைக்கு எப்படி சாலை போட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.

 இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆபாசமாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது. கோபமுற்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகன் எதிரில் இருந்த இரும்புச்சரை தூக்கி அடிக்க முற்பட்டார் உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் வந்து பெண் பொறியாளருக்கு பாதுகாப்பு கொடுத்து தற்போது யூனியன் அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment