சிவகங்கை: தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை - MAKKAL NERAM

Breaking

Friday, July 26, 2024

சிவகங்கை: தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை

 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் திருவள்ளுவர் தெருவில் அனுமதி இன்றி செயல்பட்ட தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன இந்நிலையில் உணவகங்களில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பைகள் மற்றும் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது சிவகங்கை நகர் திருவள்ளுவர் தெருவில் உள்ள தனியார் உணவகத்தில் ஆய்வு செய்தபோது அங்கு உணவகத்திற்கு முறையாக உரிமம் பெறப்படவில்லை என்பது தெரியவந்தது அது மட்டும் இல்லாமல் அதிகமான கலர் பூசப்பட்ட கோழி இறைச்சி மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்ததோடு தனியார் உணவுகத்திற்கு எச்சரிக்கை விடுத்து முதற்கட்டமாக அறிவிப்பு வழங்கியுள்ளார் இந்நிலை தொடரும் ஆனால் அந்த உணவகம் முழுமையாக மூடப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment