தேனி: மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் பலி..... தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டிட விபத்துக்குள்ளானதில் கொத்தனார் பலியான சம்பவம். ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்யக்கோரி தமிழ் தேசிய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கம்பம் அரசு மருத்துவமனையில் நடந்து வரும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நேற்று கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து ஒப்பந்ததாரர், பொறியாளர்கள் உள்ளிட்டோர் மீது கம்பம் தெற்கு நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழ்தேசிய பார்வேர்டு பிளாக் கட்சியினர் தற்போது கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தரமற்ற முறையில் நடந்து வரும் கட்டுமானப் பணியை கண்டித்தும், ஒப்பந்ததாரர், உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
No comments