• Breaking News

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தாம்பரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

     

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தாம்பரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தனி மனிதனின் பாதுகாப்பை குறைக்கும் வகையில் சர்வதிகாரப்போக்கோடு மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியது.

    சமஸ்கிருதம் பெயரில் கொண்ட சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்களும் மற்றும் பலதரப்பட்ட கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று மத்திய அரசை கண்டித்தும் புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.தாம்பரம் நீதிமன்றம் வளாகம் எதிரே உள்ள மஞ்சள் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டால் தனி மனிதனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என கூறினர்.

    மேலும் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட பெயரை மாற்றி தற்போது வாயிலேயே நுழையாத சமஸ்கிருத பெயரை சட்டத்திற்கு வைத்துள்ளனர் இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் வழக்கறிஞர்கள் பேட்டி அளித்தனர் உடன் வழக்கறிஞர்கள் சங்கம் தாம்பரம் தலைவர் ஸ்ரீராம், செயலாளர் அர்ஜுனன், பொருளாளர் பத்மநாபன், கூட்டமைப்பு துணைத் தலைவர் அன்பு செல்வன் இருந்தனர்.

    No comments