• Breaking News

    மருத்துவமனையில் தந்தை சிகிச்சை..... வீட்டில் மகள் தற்கொலை....


     சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்ய ஜீவன் (வயது 19). இவர், ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு, தனியார் கல்லூரியில் பி. சி. ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்,

    நித்யஜீவனின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கணவருக்கு உடந்தையாக அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். இதனால் நித்யஜீவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு நித்ய ஜீவனின் தாயார் நீண்டநேரம் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அருகில் உள்ள அவரது சகோதரியிடம் கூறி, வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி அவரது சகோதரி, வீட்டுக்கு சென்று நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை.

    இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறியில் நித்யஜீவன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    உடல் நிலை சரி இல்லாமல் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    No comments