ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க! - சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெகிழ்ச்சி
இப்படிதான் இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் என்பதற்கு உதாரணமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி விளங்கி வருகிறார் என்றால் மிகையாகாது. காரணம் 2023ல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மகாபாரதி சிறப்பானதொரு மாவட்ட நிர்வாகத்தை நடத்தி வருவதை மெய்ப்பிக்கும் வகையில் அலுவலக வருகை முதல் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் முடிவு, எப்போதும் எளிமையாக நேரடியாக மக்கள் சந்திப்பு, கள ஆய்வு என்று தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அதோடு கூட கல்வித்துறையில் பின்தங்கி இருந்த மாவட்டத்தை முன்னோக்கியும், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கியும் விவசாயிகளின் குறைகளை தீர்த்தும் தனக்கு எந்தெந்த மேலிட செல்வாக்கு இருக்குமோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி இம் மாவட்ட வளர்ச்சிக்கு அதிகம் வித்திட்டு வருகிறார். 60 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான மின்சார மின்மாற்றி ட்ரான்ஸ்ஃபார்மரை பெற்று தந்து கடலங்குடியில் அமைத்து மாவட்ட முழுவதும் சீரான மின்சார விநியோகத்திற்கு வித்திட்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர், பொதுமக்கள் என்று அனைவரையும் மின்சார குறைபாடுகளில் இருந்து நிம்மதி அடையசசெய்து சாதனை படை த்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய விஷயங்களை மாவட்ட ஆட்சியரே மேற்கொண்டு வருவது சிறப்பிலும் சிறப்பாக உள்ளது. நரிக்குறவர்கள் முதல் விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவருக்கும் தேவையானவற்றை கேட்டறிந்து தீர்க்கும் ஆற்றல் மிக்கவராகவும், மாணவர்களிடம் பேசுகின்ற பொழுது தான் பல கிலோமீட்டர் சென்று பள்ளிப்படிப்பை படித்ததாகவும் தொடர்ந்து மாவட்ட கலெக்டராக வரவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தீவிரமாக திட்டமிட்டு உழைத்ததால் இன்று இப்படிப்பட்ட பொறுப்பில் இருப்பதாக குறிப்பிட்டார். ஆகவே நம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வெற்றி உறுதி என்று சுட்டி காட்டினார். சில நாட்களுக்கு முன்பு கூட அவருக்கு இதய நோய் ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்தாலும் கூட வீடு திரும்பிய மறுகணமே மயிலாடுதுறை வந்து வீட்டில் ஓய்வெடுக்காமல் பணிக்கு திரும்பி, திங்கட்கிழமை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மக்களோடு மக்களாக சேவை செய்கின்ற எண்ணத்தோடு வருகின்ற அலுவலர்கள் ஒரு கணம் கூட ஓய்வில் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக தான் மாவட்ட ஆட்சியர் தன் உடல் நிலையும் பொருட்படுத்தாது ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து மக்களை சந்தித்து பணிகளை ஆற்றிட துவக்கியது மற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் 17 லட்சம் பேருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பது உறுதி. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி போல அனைவரும் பணியாற்றினால் தமிழ்நாடே தண்ணீரை ஒப்பிட்டு உச்ச நிலையை அடையும் என்பதும் உறுதி.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விரைந்து குணமடைய வேண்டும் என்று இம் மாவட்ட மக்கள் ஒற்றை எண்ணத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். பொது வாழ்வில் வருபவர்கள் அனைவரும் ஓய்வு எடுக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து உழைத்து தீர்க்க முற்பட வேண்டும் என்று குறிப்பிட்டது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் செயலால் மெய்ப்பிக்கப்படுகிறது என்றால் உண்மையே ஆகும். மயிலாடுதுறை மக்களின் நீங்கா இடம் பிடித்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்லாண்டுகள் வாழ்க வாழ்க என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் தனது நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
No comments