• Breaking News

    மயிலாடுதுறை: முருகமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது


    மயிலாடுதுறை ஒன்றியம் முருகமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமையில் நடைபெற்ற கிராம சபையில் பார்வையாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் கலந்து கொண்டார்.ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீபிரியா,கிராம நிர்வாக அலுவலர் டெல்பின்,குத்தாலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கரிகாலன்,மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள்,ஊராட்சி துணைத் தலைவர்,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்,கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது,கூட்டம் இறுதியில் ஊராட்சி செயலர் ரஞ்சிதா நன்றி கூறி நிறைவு செய்தார்.



    No comments