• Breaking News

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் வாய்ப்பு

     

    தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

    No comments