Fast Tag சேவைகளில் நாளை முதல் புதிய விதி‌முறை அமல் - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 31, 2024

Fast Tag சேவைகளில் நாளை முதல் புதிய விதி‌முறை அமல்

 

நாட்டில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக Fast tag முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த fast tag முறையில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை Fast tag-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இல்லையெனில் அந்த வாகனம்  ஹிட் லிஸ்டில் வைக்கப்படும். அதாவது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கடந்த ஜூன் மாதம் ஃபாஸ்ட் டேக் முறைகளில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. மேலும் பாஸ்ட்டேக் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அனைத்துவித தேவைகளையும் பூர்த்தி செய்ய ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment