• Breaking News

    SI முதல் DSP வரை கைதுப்பாக்கிகளை உடன் வைத்திருக்க வேண்டும் - கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சீர்வாதம் உத்தரவு

     

    தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி வரை அனைவரும் கைதுப்பாக்கிகளை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சீர்வாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பேசிய அவர், லத்தி மற்றும் துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.இனி காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி களின் பணித் திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும் என்றும் அவர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    No comments