பூச்சூட்டி காசிநாத சித்தர் சுவாமிகள் ஆலய கும்பாபிஷேகம் சிவ வேதஆகம விதிப்படி நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி அருகே பூச்சூட்டி கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வந்த ஸ்ரீலஸ்ரீ காசிநாத சித்தர் சுவாமிகள். இவர் கும்பகோணத்திலும் பூச்சட்டி கிராமத்திலும், திருநீலக்குடி பகுதியிலும் வசித்து வந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி பல்வேறு நபர்களுக்கு நோய்களை தீர்த்து வைத்தார்.
சித்தர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட அவரது ஜீவசமாதி பூச்சூட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அவரது பக்தர்கள் ஒன்று சேர்ந்து அவர் சித்தி அடைந்த இடத்தில் கோயில் எழுப்பி தியான மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளனர் அதற்கான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு அதில் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்கள் மற்றும் தியான பீடத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிவா வேத ஆகம முறைப்படி நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments