• Breaking News

    ஆக.,16 முதல் ஜனாதிபதி மாளிகை பூங்காவுக்கு அனுமதி

     

    தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களை உடையது. 340 அறைகள் உள்ள இந்த மாளிகையில், 190 ஏக்கர் பரப்பளவில் தோட்டமும் உள்ளது. முதல் பிரிவில், ஜனாதிபதி மாளிகையின் பிரதான கட்டடம் மற்றும் கணதந்திர மண்டபம், அசோக் மண்டபம் உள்ளன. இரண்டாம் பிரிவில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் உள்ளது.மூன்றாம் பிரிவில், புகழ் பெற்ற தோட்டங்களான அம்ரித் உத்யன், மூலிகைத் தோட்டம், இசைத் தோட்டம் மற்றும் ஆன்மிகத் தோட்டம் உள்ளன.

     ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகையில் உள்ள 'அம்ரித் உத்யன்' பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அன்று விளையாட்டு வீரர்கள் பார்வையிட பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அன்று ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். பூங்காவை ஆகஸ்ட் 14ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையளதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    No comments