டிரம்ப்பை கொல்ல சதி.... பாகிஸ்தானை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது
டிரம்ப், அதிபராக இருந்த போது 2020ம் ஆண்டு ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், டிரம்ப்பை கொல்ல சதி செய்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சண்ட் என்பவரை அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் கூறுகையில், சுலைமானி கொலைக்கு பழிவாங்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி செய்யும் ஈரானின் முயற்சியை முறியடிக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறினார்.
No comments