• Breaking News

    பழநி: அனைத்துலக முருகன் மாநாட்டில், இன்று 18 வகையான அறுசுவை விருந்து வழங்கப்பட்டது


     பழநியில் நடக்கும் அனைத்துலக முருகன் மாநாட்டில், இன்று (ஆக.,24)மதியம் 18 வகையான உணவு வகைகள் தடல்புடலாக வழங்கப்பட்டது.

    தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழிநியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று துவங்கியது. நாளை வரை இம்மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2 லட்சம் பேருக்கு உணவு வழங்குவதற்காக 700 பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், இன்று மதியம் 18 வகையான உணவுகள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.

    அது குறித்த விவரம் வருமாறு

    1.சாதம்

    2.ஆந்திரா பருப்பு பொடி நெய்

    3.சாம்பார்.

    4.ரசம்

    5.தயிர்

    6.எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு

    7.குருமா

    8.கேரட் பீன்ஸ் பொரியல்

    9.உருளைக்கிழங்கு கார வருவல்

    10.அப்பளம்

    11.பருப்பு மசால் வடை

    12.அடைபிரதமன் பாயாசம்

    13.மா இஞ்சி தொக்கு

    14.பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா

    15.லிச்சி சந்தேஷ்

    16.மலபார் நெய் சாதம்

    17.தயிர் வெங்காயம்

    18.வெண்டை நிலக்கடலை வருவல்

    இதனிடையே, மதியம் உணவு அருந்தச் சென்றவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சாப்பிட வந்தவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    No comments