• Breaking News

    மோடியை புகழ்ந்த மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவன்

     


    உ.பி.,யில் பிரதமர் மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் புகழ்ந்த காரணத்திற்காக மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதுடன், அவரை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். இதனையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த மரியம் என்ற பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: 2023 டிச., மாதம் எனக்கும், அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு தன்னால் முடிந்ததை விட, எனது தந்தை அதிக செலவு செய்துள்ளார்.திருமணம் முடிந்த அயோத்தி சென்ற போது, அந்நகரின் சாலைகள், வளர்ச்சி மற்றும் சூழ்நிலை எனக்கு பிடித்து இருந்தது. இதனால், கணவர் முன்னாள் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி அதித்யாநாத்தை புகழ்ந்தேன். இதனால், ஆத்திரமடைந்த கணவர், என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் சேர்த்தனர். இருப்பினும், பிரதமரையும். முதல்வரையும் புகழ்ந்ததற்காக என்னை மேசமாக திட்டியதுடன், முத்தலாக் சொல்லி என்னை அனுப்பினர். முகத்தில் சாம்பார் ஊற்றி கொடுமை படுத்தியதுடன் தாக்கினார். 

    மாமியார், கணவரின் சகோதரர், சகோதரி சேர்ந்து எனது கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக மரியம் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments