• Breaking News

    திருச்செங்கோடு: இளைஞர் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்த சிறுமி..... உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்......

     

    சக்திநாயக்கம்பாளையத்தை சேர்ந்த பிரபு – மேகலா தம்பதிக்கு 10 வயதில் தஷ்மிதா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த சிறுமிகளுடன் விளையாட சென்ற தஷ்மிதாவை செந்தில்குமார் என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி கத்தியால் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த சிறுமி, சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உடலை வாங்க மறுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக உடலை வாங்காமல் பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    No comments