ஜி.எம்.எஸ் செஸ் அகடாமி மாணவர்கள், ஐஸ் கட்டி, கூர்மையான ஆணி பலகை, முட்டை ஆகியவற்றின் மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 20, 2024

ஜி.எம்.எஸ் செஸ் அகடாமி மாணவர்கள், ஐஸ் கட்டி, கூர்மையான ஆணி பலகை, முட்டை ஆகியவற்றின் மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை


சென்னை ஆவடியில் உள்ள ஜிஎம் எஸ் யோகா அகாடெமி  சார்பாக நோவா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9 பெண்கள் மற்றும் 3 குழந்தை இணைந்து கண்களை கட்டி கொண்டு கண் தானம்  பற்றி விழிப்புணர்வு செய்யும் வகையில் 50  யோகாசன  இடைவிடாமல் செய்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து தனிநபர் சாதனையாக 22 மாணவர்கள் தங்களது யோகா திறமையை வெளிகொண்டு வரும் வகையில்  கூர்மையான ஆணிப் பலகை மீது அமர்ந்து  யோகா செய்தும், மண்பானை, தொட்டில் யோகா முட்டையின் மேல் அமர்ந்து யோகா செய்தும் புதிய சாதனை படைத்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

இந்த உலகசாதனை நிகழ்ச்சியில்  நோவா புத்தகத்தின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், இந்திய இயக்குனர் திலீபன்  இளங்கோவன் மற்றும் நடுவர் நவீன் ராஜ், ஆகியோர் அமைந்த குழு யோகா சாதனை நிகழ்வினை ஆய்வு செய்து அங்கிகரித்தனர்.அதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ்கள், கோப்பை  மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment