• Breaking News

    கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக செங்கல்பட்டு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


     செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் சார்பாக 5 சதவிகிதம் இருந்த கட்டுமான பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவிகிதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர் சமூக ஆர்வலர் சிங்கை கோ. கணேஷ்  தலைமையில், மாநில இணை செயலாளர் பானுகோபன்  முன்னிலையில் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ். யுவராஜ் அவர்கள் கண்டன உரையாற்றினார். 

    கண்டன உரையில் பெறுவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய கட்டுமான துறையை வளர்த்தெடுக்கும் வகையில் எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது அறிவித்துள்ள ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் வெளியிடவில்லை, தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைத்து சாமானிய மக்களின் தரத்தை உயர்த்தக்கூடிய கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி விலையை குறுத்திட வேண்டும் என்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, மேலும் கட்டுமானத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் 18 சதவீதம்  விழுக்காட்டை 5 சதவிகிதம் விழுக்காடாக குறைத்து கட்டுமானத்தை ஊக்கப்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றக்கூடிய சாமானிய மக்களுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடிய துறையுமான கட்டுமான துறைக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும், எக்காரனமுமின்றி அவ்வப்பொழுது விலை ஏற்றப்படும் கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்திட நிரந்தரமாக செயல்படும் விலை நிர்ணய குழு அமைத்திட வேண்டும் நிர்ணயம் செய்யப்படும் குழுவில் உற்பத்தியாளர்கள் மற்றும் கட்டுமானம் சார்ந்த அனைத்து பங்குதாரர்களும் இடம்பெற வேண்டும், என ஒன்றிய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரியும் தங்களுடைய கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநிலத் துணைத் தலைவர் சிதம்பரேஷ்,மாவட்டத் தலைவர் முனீர் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பல்வேறு தோழமை அமைப்புகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    No comments