• Breaking News

    அறந்தாங்கி: கிட்னி பழுதான 15 வயது சிறுமி..... மருத்துவ செலவிற்கு உண்டியல் பணத்தை வழங்கி உதவிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்......


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேனக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் சுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் அதில் இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை அதில் மூத்த பெண் குழந்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி பாதிப்பால் இறந்து விட்டது அந்த பெண்ணின் தந்தையும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார் தற்பொழுது தாயாரும் இரண்டு பிள்ளைகளும் இருந்து வருகின்றனர்.

    அதில் இரண்டாவது பெண் குழந்தை இந்திரா வயது(15) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு தற்போது புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் வாரம் இரு முறை டயாலிஸ் செய்து வருகின்றார்கள். 

    இந்த தகவலை சமூக வலைதளங்களில் பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அண்ணாமலையான் குடியிருப்பை சேர்ந்த முத்துகணேஷ் என்ற நற்பவலக்குடி செங்கமாரி அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் தனக்காக சைக்கிள் வாங்குவதற்கு ஆசையாக உண்டியலில் சிறுக சிறுக சேர்த ரூபாய்.5347 உண்டியல் பணத்தை இந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்காக உதவி கரம் நீட்டியுள்ளார்.

    சைக்கிள் வாங்க வேண்டும் என்ற கனவோடு சிறுக சிறுக உண்டியல் சேர்த்த பணத்தை மருத்துவ செலவுக்காக வழங்கிய மாணவனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    No comments