தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைவு
கடந்த சில நாட்களாகவே மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ரூ.6400-க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ.6,330க்கு விற்பனையாகிறது.நேற்று சவரன் ரூ.51ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 560 குறைந்து ரூ.50,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 87.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
No comments